Sunday, 19 February 2012

News


பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமி சென்னையில் நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 80. எலும்பு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், கன்னடம் உட்பட பல்வேறு மொழித் திரைப்படங்களில் எஸ்.என். லட்சுமி நடித்துள்ளார். மரணமடைந்த என்.எஸ். லட்சுமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீட்டில் அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.